Johnson & Johnson நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து தோற்றுவிக்கும் பாதகமான பக்க விளைவுகள் காரணமாக J&J தடுப்பு மருந்து வழங்களை இடைநிறுத்துமாறு அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC), Food and Drug Administration (FDA) ஆகிய திணைக்களங்கள் கூறியுள்ளன.
மேற்படி மருந்து பெற்றவர்களிடம் இரத்தம் திரைத்தல் (blood clot), கடுமையான தலையிடி, அடிவயிற்று வலி, கால் வலி, மூச்சு இடர் போன்ற பக்க விளைவுகளும் காணப்பட்டு உள்ளன. இந்த பக்க விளைவுகள் ஊசி ஏற்றப்பட்டு 6 முதல் 13 தினங்களின் பின்னரே காணப்பட்டு உள்ளன.
இந்த மருந்து மீதான மேலதிக விசாரணைகளின் பின்னரே தொடர்ந்தும் இதை பயன்படுத்துவது தொடர்பான அமெரிக்காவால் தீர்மானம் எடுக்கப்படும்.
சுமார் 6.8 மில்லியன் பேருக்கு இதுவரை இந்த மருந்து வழங்கப்பட்டு இருக்கையில், 6 பேருக்கு மட்டுமே மேற்படி பாதகமான பக்க விளைவுகள் தோன்றியுள்ளன. அந்த 6 பேரும் 18 முதல் 48 வயதுடையோர்.