இந்தியாவின் Jet Airways விமான சேவை தனது சேவைகளை முடங்க வைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள Jet Airways மேலும் பல தனது விமானங்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி வைத்துள்ளது. அந்த விமானங்களுக்கான குத்தகை பணத்தை செலுத்த முடியாமையே சேவை இடைநிறுத்தத்துக்கு காரணம்.
.
Jet Airways விமான சேவையிடம் ஏறக்குறைய 100 விமானங்கள் உண்டு. அவற்றில் சுமார் 50 விமானங்களை தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
.
இந்தியாவின் National Stock Exchange (NSE) இல் பங்குகளை விற்பனை செய்யும் இந்த விமான சேவை இன்று வியாழன் மேலும் 6 விமானங்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக NSE க்கு கூறியுள்ளது.
.
Etihad விமானசேவை Jet Airways இல் 24% பங்கை தற்போது கொண்டுள்ளது. Etihad தான் Jet Airways இல் கொண்டுள்ள உரிமையை மேலும் பணம் வழங்கி அதிகரிக்க விரும்புகிறது. ஆனால் அவ்வாறு செய்ய ஒரு நிபந்தனையையும் Etihad விதித்துள்ளது. அந்த நிபந்தனை Jet Airways யை ஆரம்பித்த Naresh Goyal Jet Airways இல் இருந்து விலகவேண்டும் என்பதே. Naresh Goyal அதற்கு இணங்க மறுத்துள்ளார்.
.
Goyal தொடர்ந்தும் விலக மறுப்பின், Etidhad தனது பங்கை விற்பனை செய்து, Jet Airways இல் இருந்து விலக உள்ளதாகவும் மிரட்டி உள்ளது.
.
முன்னர் Tata நிறுவனமும் Goyal விலகினால், தாம் முதலீடு செய்ய விரும்புவதாக கூறி இருந்தது. கோயல் விலக மறுக்க, Tata விலகிக்கொண்டது.
.
Jet Airways யின் விமானிகள், பணியாளர்கள், திருத்துவோர் ஆகியோர் தற்போது தமது சம்பளங்களை பெறமுடியாது உள்ளனர்.
.
இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன் ஒரு திருத்த திட்டம் உருவாகதுவிடின் , ஏப்ரல் மாதம் முதலாம் திகதி Jet Airways தனது சேவைகளை இடை நிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
.