மிக நீண்ட காலமாக மறைந்திருந்த IS தலைவர் அல் பக்டாடி (al-Baghdadi) அண்மையில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
.
2014 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல உலக நாடுகள் IS மீது தாக்குதல்களை ஆரம்பித்த போது அல் பக்டாடி தலைமறைவாகி இருந்தார். IS உறுப்பினர் யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கையிலும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தார். அண்மையில் வெளிவந்த வீடியோவே அவரின் இருப்பை உறுதி செய்கிறது.
.
இவரின் பேச்சை கொண்ட வீடியோ இந்த மாதம் பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அவர் தனது கூற்றில் Baghuz என்ற நகரை இழந்தமை தொடர்பாகவும் கருத்து தெரிவித்து உள்ளார். இந்த நகரே IS அமைப்பின் கட்டுப்பாடில் இருந்த கடைசி நகரம். இது அந்த நகரை IS மார்ச் மாதம் 23 திகதி இழந்திருந்தது.
.
ஆனாலும் அவர் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உரையாடுகையில், அவரின் ஒலி மட்டுமே பதிவாகி உள்ளது. அதனால் இந்த வீடியோ ஈஸ்டர் தாக்குதலுக்கு சில நாட்கள் முன்னர் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்த வீடியோவின் பின் பகுதியில் அவரின் ஒலி உரையை இணைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
அவரின் உரையில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தமது Baghuz நகரை இழந்தமைக்கான பதிலடி என்று கூறப்பட்டுள்ளது.
.
1971 ஆம் ஆண்டு ஈராக்கில் பிறந்த இவரை கைது செய்ய உதவுவோருக்கு $25 மில்லியன் வழங்க அமெரிக்கா அறிவிப்பு செய்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இவரை ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் கைது செய்து இருந்தாலும், நன்னடத்தை காரணமாக இவர் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.
.