பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான Interpol இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி governor அர்ஜுன மகேந்திரனுக்கு (Arjuna Mahendran) எதிராக red notice விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி மகேந்திரனின் இருப்பிடம் அறிந்து, அவரை கைது செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.
.
மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி bond விற்பனை விடயத்தில் ஊழல் செய்திருந்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்த ஊழல் 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் பிறந்த மகேந்திரன் ஒரு சிங்கப்பூர் குடியிருப்பாளர் ஆவார்.
.
.
மகேந்திரன் மீதான குற்றசாட்டுப்படி, மேற்படி bond குளறுபடி இலங்கைக்கு சுமார் $1 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் மகேந்திரன் தற்போது தலைமறைவாகி உள்ளார்.
.
மேற்படி விவகாரம் தொடர்பாக மகேந்திரனின் மருமகன் (son-in-law) Arjun Aloysius ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் Perpetual Treasuries Ltd என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆவார். இவருடன் Kasun Palisena என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
.
.
அப்போதைய நிதி அமைச்சர் Ravi Karunanayake மீதும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
.
.