நட்டத்தில் இயங்கும் Srilankan விமான சேவையை விற்பனை செய்ய இலங்கை மீண்டும் முனைகிறது. IMF வழங்கும் கடனை பெறும் நோக்கிலேயே இலங்கை இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டிசம்பர் 5ம் திகதிக்கு முன் Srilankan ஐ கொள்வனவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த ஜூன் மாதம் அளவில் விற்பனையை முற்றாக்க இலங்கை முனைகிறது.
இந்த ஆண்டு Srilankan $93 மில்லியன் இலாபம் அடைந்திருந்தாலும் 2015ம் ஆண்டு முதல் Srilankan $575 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது.
World Bank Group இன் அங்கமான International Finance Coporation (IFC) இந்த விற்பனை முயற்சிக்கு ஆலோசனை வழங்குகிறது.
Srilankan 56 நாடுகளுக்கு தனது சேவையை செய்கிறது.