IMF அடுத்த கட்ட $333 மில்லியனையும் வழங்குகிறது

IMF அடுத்த கட்ட $333 மில்லியனையும் வழங்குகிறது

இன்று சனிக்கிழமை IMF அதிகாரிகள் இலங்கை அரசின் பொருளாதார நடவடிக்கைகளை மீள் பார்வை செய்த பின் அடுத்த கட்ட கடன் தொகையையும் வழங்க IMF முன்வந்துள்ளது. அதன்படி இலங்கைக்கு மேலும் $333 மில்லியன் கிடைக்கும்.

இன்று அறிவித்துள்ள $333 மில்லியன் தொகையுடன் இலங்கை இதுவரை $1.3 பில்லியன் கடனை IMF இடமிருந்து பெற்றுள்ளது. மொத்தம் $2.9 பில்லியன் கடன் வழங்க IMF கடந்த ஆண்டு இணங்கி இருந்தது. இலங்கையின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்த தொகையை IMF துண்டம் துண்டமாகவே வழங்கும்.

இலங்கை தற்போதும் $12.5 பில்லியன் பெறுமதியான bond மூலமான கடன் இணக்கங்களையும், ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து நேரடியாக பெற்ற $10 கடன் இணக்கங்களையும் புதுப்பிக்க வேண்டியள்ளது. 

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 4.4% ஆல் அதிகரிக்கும் என்று உலக வங்கி (World Bank) கணித்துள்ளது. மிக குறைந்த பெறுமதிக்கு சென்ற இலங்கை நாணயத்தின் பெறுமதியும் இதுவரை சுமார் 11.3% ஆல் அதிகரித்து உள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்ச நிலையில் இருந்தபோது இலங்கையின் பொருளாதாரம் 7.3% ஆல் வீழ்ச்சி அடைந்திருந்தது.