இஸ்ரேல் பிரதமரையும், பாதுகாப்பு அமைச்சரையும் கைது செய்ய அழைப்பு விடுத்த ICC மீது தடைகளை விதிக்க பைடென் அரசும், ரம்ப் கட்சியினரும் கூட்டாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இஸ்ரேல் தலைவர்களை ICC கைது செய்ய அழைப்பது “outrageous” என்று பைடெனும், “wrong-headed decision” என்று வெளியுறவு செயலாளர் Blinken விபரித்து உள்ளனர்.
அமெரிக்கா திட்டமிடும் The Illegitimate Court Counteraction Act, திட்டமிட்டபடி நடைமுறை செய்யப்படல், ICC உறுப்பினர்கள் 1) அமெரிக்கா செல்ல தடை செய்யப்படும், 2) தற்போதைய விசாகள் பறிமுதல் செய்யப்படும், 3) இவர்கள் அமெரிக்காவில் சொத்துக்கள் கொள்வனவு செய்வது தடை செய்யப்படும்.
இந்த தடைகளில் இருந்து தப்பிக்கொள்ள ICC அமெரிக்கரையும், அமெரிக்க ஆதரவு நாட்டவரையும் குறிவைப்பதை தவிர்க்க வேண்டுமாம்.
ஆனால் இதே ICC ரஷ்ய சனாதிபதி பூட்டின் மீது கைதுக்கான கட்டளை விடுத்தபோது ICC க்கு ஒத்தாசை புரிந்திருந்தது அமெரிக்கா. அமெரிக்கா ICC யை அங்கத்துவம் பெற்று ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தன் எதிரிகளை ICC கைது செய்ய மறைவில் உதவிகளை செய்து வருகிறது.