ICC கைதியை விடுதலை செய்த இத்தாலி பிரதமர் விசாரணையில் 

ICC கைதியை விடுதலை செய்த இத்தாலி பிரதமர் விசாரணையில் 

சர்வதேச குற்ற நீதிமன்றம் (International Criminal Court) தேடிவந்த Osama Najim என்ற லிபியா நாட்டு warlord ஐ விடுதலை செய்த இத்தாலிய பிரதமர் மீது விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன.

Najim லிபிய போலீஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாகவும், Mitiga என்ற லிபிய தடுப்புக்காவல் சிறையின் உயர் அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற குற்ற செயல்கள் காரணமாகவே ICC யால் விசாரணைக்கு தேடப்பட்டவர்.

Najim ஜனவரி 21ம் திகதி இத்தாலியில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரை கையேற்க ICC நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையிலேயே Najim இத்தாலிய பிரதமரால் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட Najim இத்தாலிய அரச விமானத்தில் தனியே எடுத்து சென்று லிபியாவில் விடுதலை செய்யப்பட்டார். இவரின் விடுதலையால் இத்தாலிய பிரதமர் அடைந்த நயம் என்ன என்பது கேவிக்குறியாக உள்ளது.

ICC உரிய நேரத்தில் Najim கைதுக்கான ஆவணத்தை இத்தாலிய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறுகிறார் இத்தாலிய பிரதமர்.

Najim மை கைது செய்ய ICC மீண்டும் ஒரு பிடியாணை விடுத்துள்ளது.