இந்தியாவில் பிறந்த அரவிந் கிருஷ்ணா (Arvind Krishna) அமெரிக்காவின் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான IBM நிறுவனத்தின் CEO பதவியை ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் அடையவுள்ளார். 1990 ஆம் ஆண்டு IBM நிறுவனத்தில் இணைந்த இவர் படிப்படியாக வளர்ந்து தற்போது CEO பதவிக்கு வந்துள்ளார்.
.
IMB நிறுவனம் அமெரிக்காவின் RedHat என்ற நிறுவனத்தை $34 பில்லியனுக்கு கொள்வனவு செய்தமைக்கு கிருஷ்ணாவின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறப்படுகிறது.
.
தமிழ்நாட்டு கூனூரில் (Coonoor) தனது ஆரம்ப கல்வியை கற்ற கிருஷ்ணா கான்பூரில் உள்ள Indian Institute of Technology யில் மின்னியல் பட்டதாரி தராதரம் பெற்று பின்னர் அமெரிக்காவின் University of Illinois யில் PhD தராதரம் அடைந்திருந்தார்.
.
கடந்த 8 வருடங்களில் IBM சுமார் 25% வருமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.
.
தற்போது அமெரிக்காவின் 4 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர் பதவிகளை இந்தியாவில் பிறந்த அமெரிக்கர் கொண்டுள்ளனர். Satya Nadella என்பவர் Microsoft அதிபர் பதவியில் உள்ளார். Sundar Pichai என்பவர் Google நிறுவனத்தின் அதிபராக உள்ளார். Shantanu Narayan என்பவர் Adobe நிறுவனத்தின் அதிபராக உள்ளார். Ajay Banga என்பவர் Mastercard நிறுவனத்தின் அதிபராக உள்ளார்.
.