அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவும், நியூசிலாந்தும் தமது நாடுகளுள் சீன Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்ப உபகரணங்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை என்று தீர்மானம் எடுத்து இருந்தன. Huawei உபகரணங்கள் தமது நாடுகளை உளவு பார்க்கலாம் என்றே கரணம் கூறப்பட்டது.
.
ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டன. தற்போது நியூசிலாந்து தனது தீர்மானத்தை மாற்றலாம் என்று நம்பப்படுகிறது.
.
தற்போது சீனா சென்றுள்ள நியூசிலாந்து பிரதமர் சீன ஜனாதிபதி Xi JinPing, மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து உள்ளார். Huawei மீதான தடை காரணமாக முதலில் சீனா இந்த சந்திப்பை தவிர்த்து வந்தது. இறுதியில் இன்றே அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
.
சீனாவில் உள்ள நியூசிலாந்து பிரதமர் Huawei 5G தொடர்பான இறுதி தீர்மானங்கள் உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் நியூசிலாந்து சீனாவின் Belt and Road திட்டத்திலும் பங்குகொள்ளலாம் சென்றும் கூறியுள்ளார்.
.
சீனாவின் Huawei உபகரணங்கள் தமது நாடுகளை வேவு பார்க்கலாம் என்ற அமெரிக்காவின் கவலை ஒருபுறம் இருக்க, Huawei உபகரணங்களை கொண்ட ஏனைய நாடுகளை அமெரிக்கா தொடர்ந்தும் வேவு பார்க்க முடியாமல் போகும் என்பது இன்னோர் கவலை.
.