சீனாவின் தொழிநுட்பங்களை, குறிப்பாக சீனாவின் Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ய வேண்டும் என்று ரம்ப் அரசு வற்புறுத்தியும், ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறு Huawei உட்பட சீன நிறுவனங்களை தடை செய்வதில்லை என்று தீர்மானித்து உள்ளது.
.
அமெரிக்காவின் ரம்ப் அரசு மேற்கு நாடுகளின் பாதுகாப்புக்கு Huawei குந்தகமாக அமையும் என்றும், Huawei தனது தொழில்நுட்பங்களில் வேவு பார்க்கும் வசதிகளை கொண்டுள்ளது என்று கூறி இருந்தாலும், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளன. பதிலாக தொலைத்தொடர்புகளை கண்காணிக்க தம்மிடம் போதிய தொழிநுட்பங்கள் உள்ளன என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
.
ஐரோப்பிய ஒன்றியம் சீன நிறுவனங்களை தடை செய்யாத நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமக்கு விரும்பிய நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தலாம்.
.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க அஸ்ரேலியாவும், நியூசிலாந்தும் Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை தடை செய்துள்ளன.
.
சீன ஜனாதிபதி Xi JinPing இன்று பிரான்சின் ஜனாதிபதி Macron, ஜெர்மனியின் Merkel, ஐரோப்பிய ஒன்றியத்தின் Juncker ஆகியோரை சந்தித்தும் உள்ளார்.
.