அமெரிக்காவின் Huawei மீதான யுத்தத்தில் சீனாவுக்கான கனடிய தூதுவர் John McCallum இன்று வீழ்ந்துள்ளார். கனடிய பிரதமர் Trudeau இன்று சீனாவுக்கான கனடிய தூதுவரை பதவியை விட்டு விலக கூறியுள்ளார். தூதுவரும் கேட்டுக்கொண்டதன்படி பதவி விலகி உள்ளார்.
.
சீனாவின் Huawei என்ற தொழிநுட்ப நிறுவனத்தின் CFO (Chief Financial Officer) Meng Wanzhou அண்மையில் கனடாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் ஈரான் மீதான தடையை Huawei மீறியது என்று கூறிய அமெரிக்காவே Wanzhouவை கைது செய்ய கேட்டுள்ளது. இவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் செயல்பாடுகள் தற்போது நடைபெறுகின்றன.
.
நீதிமன்றத்தில் உள்ள இந்த விடயம் தொடர்பாக சீனாவுக்கான தூதுவர் தெரிவித்த கருத்து ஒன்றே அவரின் பதவியை பறித்துள்ளது. அமெரிக்கா CFO Meng Wanzhou மீது திடமான வழக்கு ஒன்றை கொண்டிருக்கவில்லை என்று McCallum கூறியிருந்தார். பின்னர் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனாலும் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.
.
McCallum இதற்கு முன் பாதுகாப்பு அமைச்சர் (2002-2003), Veterans Affairs அமைச்சர் (2003-2004), Revenue அமைச்சர் (2004-2006), குடிவரவு அமைச்சர் (2015-2017) ஆகிய பதவிகளை வகித்தவர்.
.