சீனாவுடனான வர்த்தக போரின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் ரம்ப் அரசு சீனாவின் Huawei நிறுவனம் மீது தடை விதித்திருந்தது. அதானல் தான் தயாரிக்கும் smart phone களுக்கு தேவையான Android OS (operating system) என்ற software ஐ பெற Huaweiக்கு முடியவில்லை. Android அமெரிக்காவின் Google நிறுவனத்துக்கு சொந்தமானது.
.
வேறு வழியின்றி Huawei தனது சொந்த OS தாயரிக்கும் பணியில் ஈடுபட்டது. அந்த முயற்சியின் பயனே இன்று வெள்ளிக்கிழமை அறிமுகமான Harmoney OS (சீன மொழியில் HongMeng OS).
.
இந்த OS smart phoneகளில் மட்டுமன்றி தொலைக்காட்சி போன்ற பொருட்களையும் இயக்கும் என்று கூறப்படுகிறது.
.
Harmony OS ஒரு open-source software என்றும் கூறப்படுகிறது. Android OS உம் ஒரு open-source software ஆகும்.
.
Google நிறுவனத்தின் Android OS க்கும், Apple நிறுவனத்தின் iOS க்கும் பலமான போட்டியை Harmony OS வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
.