Horana Tyre தொழில்சாலை கட்டுமானம் இடைநிறுத்தம்

RigidTyre

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமையகத்தை கொண்ட Ceylon Steel Corp. இலங்கையின் Wagawatta, Horana பகுதியில் புதியதோர் tire தயாரிக்கும் தொழிசாலை ஒன்றை நிறுவ முன்வந்தது. இந்த செய்தியை அந்நிறுவனத்தின் தலைமையான Nandana Jayadewa Lokuwithana கடந்த ஜனவரியில் வெளியிட்டு இருந்தார். Rigid Tyre என்ற இந்த தொழிசாலைக்கு வழங்கப்பட்ட நிலமே இந்த இழுபறிக்கு காரணம்.
.
இந்த தொழிசாலையின் பயன்பாட்டுக்கு, அரசுக்கு சொந்தமான, 100 ஏக்கர் நிலத்தை இலங்கை அரசு வழங்கி இருந்தது. பதிலாக 100 இலங்கை ரூபாய்களை ஏக்கர் ஒன்றுக்கு வருடாந்தம் குத்தகை பெற இலங்கை அரசு இணங்கி இருந்தது. இவ்வாறு மிக குறைந்த குத்தகைக்கு அரசு இணங்கியதே இழிபறிக்கு காரணம். நிலம் ஏறக்குறைய இலவசமாகவே வழங்கப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.
.
தற்போது மூடப்பட்டு உள்ள இத்தாலிய (Anagni, Rome) நிறுவனமான Marangoni பயன்படுத்திய உபகாரங்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியே இலங்கையின் இந்த புதிய tire தொழிசாலை இயங்க இருந்தது.
.
இந்த புதிய தொழிசாலை சுமார் $78 மில்லியன் முதலீட்டை கொண்டது. இது சுமார் 3,000 வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
.