Hong Kong இல் முடங்கிய சவுதி சகோதரிகள்

Saudi

தமது குடும்ப கட்டுப்பாடுகளை விரும்பாத இரண்டு சவுதி பெண்கள் அஸ்ரேலியாவுக்கு  தப்பி ஓட முனைந்து, தற்போது Hong Kong நகரில் முடங்கி உள்ளனர்.
.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு குடும்பத்துடன் உல்லாச பயணம் வந்த இந்த 18 மற்றும் 20 வயதுடைய சகோதரிகள் அங்கிருந்து அஸ்ரேலியாவுக்கு தப்பி ஓடும் நோக்கில் Hong Kong சென்றுள்ளனர். ஆனால் உண்மையை அறிந்த சவுதி அரசு அந்த பெண்களின் சவுதி கடவுசீட்டுகளை Hong Kong இல் பறிமுதல் செய்துள்ளது. இவர்களின் அஸ்ரேலியாவுக்கான விமான சீட்டும் இரத்து செய்யப்பட்டது.
.
ஆனாலும் அந்த சகோதரிகள் டுபாய் செல்லும் விமானத்தில் ஏற மறுத்துவிட்டனர். அவர்கள் Hong Kong நகரிலேயே இதுவரை தங்கி உள்ளனர். பாதுகாப்பு கருதி தாம் இதுவரை 13 இடங்களுக்கு மாறி உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.
.
இந்த சகோதரிகளுக்கு Hong Kong வழங்கிய நீடித்த விசா இன்று பெருவாரி 28 ஆம் திகதியுடன் முடிந்துள்ளது. ஆனால் அந்த சகோதரிகள் தொடர்ந்தும் Hong Kong கிலேயே தங்கி உள்ளனர். ஏதாவது ஒரு நாடு அகதி அந்தஸ்து வழங்கும் என்பதே அவர்களின் நம்பிக்கை.
.
இவ்வாறு Bangkok நகரில் தப்பி ஒட்டி தங்கி இருந்த Rahaf Mohammed என்ற 18 வயது பெண்ணுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கி அழைத்திருந்தது.
.
ஆனால் இவ்வாறு தப்பி ஓட முயன்ற Dina Ali Lasloom என்ற பெண் மணிலாவில் அகப்பட்டு சவுதிக்கு திரும்பி அனுப்பப்பட்டு இருந்தார்.

.