ஜப்பான் கார் நிறுவனங்களான Honda வும் Nissan னும் ஒன்றாக இணைய தீர்மானித்துள்ளன. வளர்ந்து வரும் சீன கார் நிறுவனங்கள் தொடுக்கும் போட்டியை கையாளவே இந்த இரண்டு மிகப்பெரிய கார் நிறுவனங்களும் இணைய முயற்சிக்கின்றன.
ஜப்பானின் Mitsubishi கார் நிறுவனம் ஏற்கனவே Nissan நிறுவனத்துடன் கூட்டாக இயங்குகிறது. அதனால் மேற்படி இணைவு Honda, Nissan, Mitsubishi இணைவாகவே இருக்கும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தரமான ஜப்பான் கார்கள் உலகில் நன் மதிப்பை பெற்று வேகமாக வளர்ந்து அமெரிக்க கார் தயாரிப்புகளை வீழ்த்தின. தற்போது ஜப்பானின் கார் நிறுவனங்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
குறிப்பாக BYD போன்ற மின்னில் இயங்கும் EV (Electric Vehicle) கார் உலகில் சீன கார்கள் ஐரோப்பா வரை நன் மதிப்பை பெற்றுள்ளன. அவற்றின் வளர்ச்சியை தடுக்க ஐரோப்பா தற்போது சீனா கார்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை நடைமுறை செய்துள்ளன.
Honda, Nissan பேச்சுக்கள் அடுத்த 6 மாதங்களுக்கு தொடரும். அத்துடன் பாவனையாளர் நன்மை கருதி ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த இணைப்பை தடுக்க முனையலாம்.
இவை இணைந்தாலும் Toyota நிறுவனமே உலகின் முதலாவது பெரிய கார் நிறுவனமாக இருக்கும்.