Hong Kong இல் தற்போது இடம்பெற்றுவரும் வேலை நிறுத்தங்களால் இன்று திங்கள் அங்குள்ள விமான நிலைய சேவைகளும் குறைந்துள்ளன. அங்கு பணிபுரியும் விமான போக்குவரத்து ஊழியர்கள் (air traffic controllers) தீரென பெருமளவில் சுகவீன விடுப்பு எடுத்துள்ளதாலேயே இந்த இடர்பாடு ஏற்பட்டு உள்ளது.
.
திங்கள் மதியம் முதல் செவ்வாய் மதியம் வரை இந்நிலை தொடரலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை சுமார் 230 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன.
.
வழமையாக மணித்தியாலத்துக்கு 68 விமானங்கள் மேலேறும் அல்லது தரையிறங்கும் இந்த நிலையத்தில் தற்போது மணித்திலாத்துக்கு 34 விமானங்களே இறங்குகின்றன அல்லது மேலேறுகின்றன.
.
விமான நிலையம் செல்லமுன் விமான சேவையுடன் தொடர்புகொண்டு நிலைமையை உறுதிப்படுத்தும்படி அதிகாரிகள் பயணிகளை கேட்டுள்ளனர்.
.