2011 ஆம் ஆண்டு Johnson & Johnson என்ற நிறுவனத்தால் உலக அளவில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி 40% hip implant சிகிச்சைகள், அச்சிகிச்சைகள் நடைபெற்று 5 வருடங்களுள் தோல்வி அடைந்துள்ளன என நீதிமன்ற ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த வழக்கு J & J யின் A.S.R. (Articular Surface Replacement) சிகிச்சை பெற்ற 10,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளால் தொடரப்பட்டிருந்தது. அதில் 2000 வழக்குகள் ஒன்றாக கலிபோர்னியாவிலும் 7000 வழக்குகள் ஒன்றாக Ohio விலும் விசாரணை செய்யப்படும். கடந்த வருடம் J & J யும் U$3 பில்லியனை இவ்வழக்கு விவகாரங்களுக்கென ஒதுக்கி இருந்தது.
குறிப்பாக cup பாகம் ball பாகம் ஆகிய இரண்டு பாகங்களும் உலோகத்தால் செய்த hip replacement உபகரணங்களே அதிகம் பாதிப்படைந்துள்ளன. இங்கு உலோகங்கள் தம்முள் உராய்வதே இவை பழுதடைய முக்கிய காரணியாகும். இவ்வகை உபகரண பாவனை தற்போது மிகவும் குறைந்துள்ளது. 2010 இன் நடுப்பகுதியில் J & J தனது hip replacement உபகரங்களை மீளப்பெற்றிருந்தது. உலோகத்தாலும் பிளாஸ்டிக்காலும் கலந்து செய்யப்பட்ட உபகரணங்கள் 15 வருடம்வரை செயலாற்ற முடியும்.