Hezbollahவை பயங்கரவாதிகள் என்கிறது சவுதி

Hezbolla

கெஸ்புல்லா (Hezbollah) லெபனான் நாட்டின் தென்பகுதியில் ஆட்சிபுரியும் மிக பலம்வாய்ந்த ஓர் ஆயுத குழு. சியா முஸ்லீம்களான இவர்களுக்கு சியா முஸ்லீம்கள் நிறைந்த நாடான ஈரான் பண மற்றும் ஆயுத உதிவிகள் செய்வதுண்டு. சிரியாவின் அசாத் தமையிலான அரசுக்கும் ஈரான் பண மற்றும் ஆயுத உதவிகள் செய்வதுண்டு.
.
அண்மையில் சவுதி உட்பட பல சியா முஸ்லீம் நாடுகளும், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் சிரியாவில் புரிய இருந்த அசாத் ஆட்சியை கவிழ்க்க Free Syrian Army என்ற ஆயுத குழுவை உருவாக்கி இருந்தன. சிரியாவின் இராணுவம் பலவீனம் அடைந்தபோது Hezbollah தனது படைகளை சிரியாவுக்கு அனுப்பி அசாத்தின் அரசை பாதுகாத்தது. பின் ரஷ்யாவும் அசாத்தின் உதவிக்கு வந்தபோது Free Syrian Army பாரிய தோல்விகளை அடைந்தது. அதன் விளைவாக சவுதியின் ஆதிக்கமும் வீழ்ந்தது.
.
Hezbollah மீது வெறுப்படைந்த சவுதி இப்போது Hezbollah இயக்கத்தை ஓர் பயங்கரவாதிகள் இயக்கம் என்று முத்திரை குத்தியுள்ளது. சவுதியுடன் இணைந்து UAE, குவைத், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளும் Hezbollah குழுவை பயங்கரவாதிகள் என கூறியுள்ளன.
.
1982 ஆம் ஆண்டில் இஸ்ரவேல் லெபனான் நாட்டின் தென் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்தபோது அதை முறியடிக்க ஈரானின் உதவியுடன் தோன்றிய இயக்கமே Hezbollah. தற்போது அது ஒரு அரசியல் கட்சியாகவும் உள்ளது.
.
பொதுவாக தமது ஆதரவு ஆயுத குழுக்களை போராளிகள் என்றும் எதரி ஆயுத குழுக்களை பயங்கரவாதிகள் என்பதுவும் வழமையே.
.

கடந்த மாதம் 19ஆம் திகதி சவுதி தாம் லெபனான் நாட்டுக்கு வழங்கும் U$ 5 பில்லியன் உதவிகளையும் நிறுத்துவதாக கூறி இருந்தது. கடந்த நவம்பர் மாதம் சவுதி இளவரசர் ஒருவர் லெபனான் ஊடாக போதை கடத்த முயன்றபோது அந்த இளவரசரை லெபனான் கைது செய்திருந்தது.
.