இதுவரை காலமும் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக லண்டன் Heathrow விமான நிலையமே இருந்து வந்திருந்தது. ஆனால் Dubai விமான நிலையம் அந்த பெருமையை 2014 ஆம் ஆண்டில் பறித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் Dubai விமான நிலையம் 70.5 மில்லியன் பயணிகளை கையாண்டு உள்ளது. ஆனால லண்டன் Heathrow விமான நிலையம் 68.1 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாண்டு உள்ளது.
.
.
Dubaiயின் 2014 ஆம் ஆண்டுக்கான பயணிகள் தொகை 2013 ஆண்டின் தொகையைவிட 6% அதிகம். 2014 ஆம் ஆண்டில் Dubaiயின் ஓடுபாதை ஒன்று சுமார் 80 நாட்கள் திருத்த வேலைகள் காரணமாக பாவிக்கப்படாமல் இன்ருந்ததால் பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தும் மொத்த பயணிகள் தொகை 70.5 மில்லியன் ஆக இருந்துள்ளது.
.
.
2015 ஆம் ஆண்டில் Dubaiயின் பயணிகள் தொகை 79 மில்லியன் வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Dubai விமான நிலையத்தை பிரதான தளமாக கொண்டது Emirates விமான சேவை.
.
.
உலகின் அதிக விமானக்களை கையாளும் விமான நிலையமாக Chicago O’Hare விமான நிலையம் உள்ளது. அமெரிக்காவின் Atlanta விமான நிலையம் அமெரிக்காவுள் அதிகம் பயணிகளை கையாளும் விமான நிலையமாகும்.
.
.
உலகின் அதிக பொதிகளை கையாளும் விமான நிலையமாக Hong Kong விமான நிலையம் உள்ளது.
.