இந்தியா ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி GSAT-6A என்ற நவீன செய்மதியை ஏவி இருந்தது. ஆனால் அந்த செய்மதியுடனான தொடர்புகளை மறுநாள் 30 ஆம் திகதி முதல் முற்றாக இழந்துள்ளது இந்திய ISRO. (Indian Space Research Organization). இந்த செய்தியை ISRO தற்போது உறுதி செய்துள்ளது.
.
.
இந்த செய்மதியை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ISRO தன்னால் முடிந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவற்றை அம்முயற்சிகள் எந்த பலனையும் வழங்கவில்லை.
.
.
இந்த செய்மதி குறைந்தது 10 வருடங்களுக்கு சேவை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. S-band மற்றும் C-band சேவைகளை வழங்கவல்ல இந்த செய்மதி இந்திய இராணுவத்தாலும் பயன்படுத்தப்பட இருந்தது. குறிப்பாக இந்திய எல்லை பகுதிகளில் cell phone சேவை அதிகம் இல்லாமையால் இந்த செய்மதி மூலம் இராணுவ தொலைபேசி தொடர்புகளையும் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
.
.
சுமார் 2,140 kg பாரம் கொண்ட இந்த செய்மதி 270 கோடி இந்திய ரூபாய்கள் செலவில் தயாரிக்கப்பட்டது. இது சுமார் 36,000 km உயரத்தில் பூமியை வலம்வர திட்டமிடப்பட்டு இருந்தது.
.