சூழல் ஆர்வலர் கிரேரா (Greta Thunberg) காசாவில் துன்புறும் பலஸ்தீனருக்கு ஆதரவாக குரல் எழுப்ப அதை விருப்பத்தை ஒருவர் மேடைக்கு சென்று கிரேராவின் ஒலிவாங்கியை பறித்துள்ளார்.
நேற்று ஞாயிறு Amsterdam நகரில் இடம்பெற்ற தனது சூழல் வெப்பமாதல் தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள கிரேரா இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பலஸ்தீனர்களையும் அழைத்திருந்தார். அவர்கள் பலஸ்தீனர் ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இதை விரும்பாத ஒருவர் மேடைக்கு சென்று கிரேராவின் ஒலிவாங்கியை பறித்துள்ளார். இவரை விரைந்து கட்டுப்படுத்திய அதிகாரிகள் ஒலிவாங்கியை மீண்டும் கிரேராவிடம் வழங்கினார்.
அப்போது கூட்டம் “No climate justice on occupied land” என்று குரலிட, கிரேராவும் கூடவே No climate justice on occupied land என்று குரலிட்டு உள்ளார்.
இந்த கூட்டத்தில் சுமார் 70,000 மக்கள் கூடியிருந்ததாக கூறப்படுகிறது.