Golden Visa திட்டத்தை கைவிடுகிறது ஸ்பெயின்?

Golden Visa திட்டத்தை கைவிடுகிறது ஸ்பெயின்?

ஸ்பெயின் தனது Golden Visa திட்டத்தை விரைவில் கைவிடலாம் என்று கூறப்படுகிறது.

2013ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தின்படி 500,000 யூரோ ($551,650) பெறுமதிக்கு ஸ்பெயினில் வீடு கொள்வனவு செய்பவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினருக்கும் 3 ஆண்டுகள் ஸ்பெயினில் வாழும் உரிமை கொண்ட (residency visa) விசா வழங்கப்பட்டது.

இந்த Golden Visa திட்டம் வீடுகளின் விலையை உயர்த்த, உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது அவதிப்பட்டனர். அதனாலேயே இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த விசா முறையை ஐரோப்பிய ஒன்றியமும் நிறுத்த கேட்டிருந்தது. ஐரோப்பாவுள் நுழைய இது ஒரு பின்கதவு போல அமைகிறது என்று ஐரோப்பா குற்றம் சுமத்தி இருந்தது.

ஸ்பெயின் இதுவரை சுமார் 5,000 இவ்வகை விசாவை வழங்கி இருந்தது. பெரும்பாலும் சீனரே அவற்றை பெற்று இருந்தனர்.

போர்த்துக்கலும் தான் கொண்டிருந்த இவ்வகை விசா திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.