சீனாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் Gaokao (Higher Exam) என்ற சோதனையை இந்த ஆண்டு ஜூன் 7ம், 8ம் திகதிகளில் 13.4 மில்லியன் மாணவர் எழுதுகிறார்கள்.
உலகத்திலேயே மிக கடுமையான சோதனையாக கருதப்படும் இந்த சோதனை சீன மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்பை தீர்மானிக்கும். அதி கூடிய புள்ளிகளை பெறும் மாணவர் முன்னணி பல்கலைக்கழக அனுமதி பெறுவர்.
கடந்த ஆண்டு இந்த சோதனையை 12.9 மில்லியன் மாணவர் மட்டுமே எழுதி இருந்தனர்.
இந்த சோதனை சீன மொழி, கணிதம், ஆங்கிலம், பௌதீகம், இரசாயனம், உயிரியல், அரசியல், வரலாறு ஆகிய பாடங்களை உள்ளடக்கும்.
பொதுவாக இந்த சோதனைக்கு ஒரு தடவை மட்டுமே அனுமதிக்கப்படும்.