Galwan சண்டையில் சீனா இந்திய படைகளையும் கைப்பற்றியது?

Galwan_Valley

அண்மையில் Galwan Valley பகுதியில் இந்திய படைகளுக்கும், சீன படைகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புக்கு 20 இந்திய படையினர் பலியாகி இருந்தனர். அதேவேளை மேலும் 10 இந்திய படையினர் சீனாவால் கைப்பற்றப்பட்டும் இருந்தனர் என்ற செய்தியும் பின் வந்தது. ஆனால் இந்தியாவும், சீனாவும் அந்த செய்தியை மறுத்து உள்ளன.
.
கைபற்றலை இருதரப்பும் மறுத்தாலும் இருதரப்பும் பயன்படுத்தும் ‘currently’, ‘missing in action” போன்ற சொற்கள் மேலும் குழப்பத்தை தோற்றுவிக்கின்றன.
.
Shiv Aroor என்ற India Today பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ஒருவர் சீனாவால் கைது செய்யப்பட்டு இருந்த இந்திய படையினர் 10 பேரும் ஏற்கனவே (18 ஆம் திகதி) விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.
.
சீனா இதுவரை தனது இழப்புகளை வெளியிடவில்லை.
.
இந்தியாவும், சீனாவும் எல்லையில் நிலவும் முறுகல் நிலையை தணிக்க கடுமையாக முயற்சிக்கின்றன. மேல்மாட்ட பேச்சுக்கள் தொடர்கின்றன.
.
1975 ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் 4 இந்திய படையினர் பலியாகி இருந்தனர். அதன் பின் எல்லையில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறவில்லை.
.
1996 ஆம் ஆண்டு இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து 2 km தூரத்துள் துப்பாக்கியால் சுடாமை, வெடிகளை வெடிக்காமை, துப்பாக்கி கொண்டு வேட்டையாடாமை ஆகிய விதிகளுக்கு இணங்கி இருந்தன.
.
மேற்படி சம்பவம் தொடர்பாக internet எங்கும் பல பொய்யான படங்கள், வீடியோக்கள் பரவுகின்றன. சிலர் சண்டையிடும் காட்சி கொண்ட ஒரு வீடியோ மேற்படி சம்பவம் என்று கூறுகிறது. ஆனால் அந்த வீடியோ பகல் வேளையில் பிடிக்கப்பட்டது. Galwan சண்டை இரவில் இடம்பெற்றது. இன்னோர் internet படம் Boko Haram என்ற குழுவால் கொலை செய்யப்பட்ட நைஜீரியான் இராணுவத்தை மரணித்த இந்திய இராணுவம் என்று காட்டுகிறது.
.