அமெரிக்காவின் முன்னாள் விசேட படை (SEAL) உறுப்பினரான Edward Gallagher யுத்தக்குற்றம் எதையும் செய்திருக்கவில்லை என்று அமெரிக்காவின் இராணுவ நீதிமன்றம் நேற்று செய்வாய் தீர்ப்பு கூறி உள்ளது. குற்றம் அற்றவர் என்று கூறப்படும் இவரை அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் வாழ்த்தி உள்ளார்.
.
தற்போது 40 வயதுடைய Gallagher மீது ஈராக்கிய கைதி ஒருவரை கொலை செய்தமை, ஈராக்கிய வயோதிபர் ஒருவரையும், சிறுமி ஒருத்தியையும் கொலை செய்ய முயன்றமை, கைதிகளுடன் சட்டவிரோதமாக படம் பிடித்தமை போன்ற பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
.
ஆனால் கைதிகளுடன் படம் பிடித்த குற்றம் ஒன்றில் மட்டுமே Gallgher குற்றவாளி என்று அமெரிக்காவின் இராணுவ நீதிமன்றால் காணப்பட்டு உள்ளார். Warcrime வகைக்குள் அடங்கக்கூடிய குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்படவில்லை என்று அமெரிக்க இராணுவ நீதிமன்றம் கூறியுள்ளது.
.
இந்த விசயத்தை International Criminal Court விசாரணை செய்ய முனைந்ததை ரம்ப் ஆட்சியில் உள்ள அதிகாரிகள் தடுத்திருந்தனர். விசாரிக்க முற்பட்ட ஐ.நா. அதிகாரி ஒருவரின் அமெரிக்க விசாவும் இரத்து செய்யப்பட்டு இருந்தது.
.