G7 அமைவிடத்தில் ஈரானின் வெளியுறவு அமைச்சர்

Iran-Nuclear

Biarritz என்ற பிரென்சு நகரில், அந்நாட்டின் ஜனாதிபதி Macron தலைமையில், தற்போது G7 அமர்வு இடம்பெறுகிறது. அங்கு அமெரிக்காவின் ரம்ப் உட்பட கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் உள்ளனர்.
.
வியப்படையும் வகையில், முன்னறிவிப்பு எதுவும் இன்றி, ஈரானின் வெளியுறவு அமைச்சரும் தற்போது Biarritz நகரம் சென்றுள்ளார். ஈரானின் விமானம் ஒன்றும் Biarritz விமான நிலையத்தில் காணப்படுள்ளது.
.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் Mohammed Javad Zarif அங்கு ஏன் சென்றார் என்பதை அறிவிக்காவிட்டாலும், ரம்புக்கும், ஈரானுக்கும் இடையே நிலவரம் முறுகல் நிலையை குறைக்கவே Macronனும் ஏனைய தலைவர்களும் முனைகின்றனர் என்று கூறப்படுகிறது.
.
2015 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவின் ஒபாமா அரசும் ஈரானுடன் செய்துகொண்ட அணு உடன்படிக்கையை ரம்ப் நிராகரித்து, அந்த இணக்கத்தில் இருந்து வெளியேறியும் இருந்தார். அத்துடன் ஈரான் மீது பாரிய தடைகளையும் விதித்து இருந்தார்.
.