நாளை 8ஆம் திகதியும், மறுதினம் 9ஆம் திகதியும் கனடாவின் Quebec மாகாணத்து Charlevoix நகரில் இடம்பெறவுள்ள வருடாந்த G7 அமர்வுக்கு வேண்டாவெறுப்புடன் செல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். இவர் பதவிக்கு வந்த நாள் முதல் தன்னிசையாக எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் தொடர்பாக மற்றைய 6 நாட்டு தலைவர்களும் விமர்சனம் செய்யக்கூடும் என்பதாலேயே ரம்ப் அங்கு செல்ல நாட்டம் கொண்டிருக்கவில்லை.
.
.
ரம்பின் வர்த்தகத்துக்கான ஆலோசகர் Larry Kudlow இந்த முரண்பாடுகளை ஒரு குடும்ப சண்டை (much like a family quarrel) என்று மட்டுமே கூறியுள்ளார். ஆனால் முரண்பாடுகள் அதி உச்சத்தில் உள்ளன. கூட்ட முடிவில் வழமைக்கு முரணாக கனடிய பிரதமர் ஒரு அறிக்கை மட்டுமே வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
.
.
மற்றைய 6 தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் இருக்கையில், இங்கே ரம்ப் தனித்து நின்று முகம்கொடுக்க விரும்பவில்லை.
.
.
ரம்ப் இந்த அமர்வில் ஈரான் விடயம் போன்றவற்றை கதைக்க விருப்பவில்லை. ஆனால் ஜேர்மனியின் மேர்கல் தான் இதுதொடர்பாக ரம்புடன் கதைப்பேன் என்றுள்ளார்.
.
.
வடகொரியாவின் கிம்மை மிகவும் மதிப்பிற்குரிய மனிதர் (very honorable) என்று கூறும் ரம்ப், தம்மையும், தம் நாடுகளையும் உதாசீனம் செய்வதால் விசனம் கொண்டுள்ளனர் மற்றைய 6 நாடுகளின் தலைவர்களும்.
.
.
ரம்ப் இங்கிருந்து சிங்கப்பூர் செல்வார். அங்கு ரம்ப்-கிம் சந்திப்பு இடம்பெறும். அந்த சந்திப்பின் போது எதையும் சாதிக்காது ரம்ப் வெறுக்கையுடன் திரும்பின், நிலைமைகள் மேலும் உக்கிரம் அடையும்.
.