Fox News, Dominion வழக்கு $787.5 மில்லியன் இணக்கத்தில்

Fox News, Dominion வழக்கு $787.5 மில்லியன் இணக்கத்தில்

Fox News என்ற அமெரிக்க கடும்போக்கு வலதுசாரி செய்தி சேவை நிறுவனத்திற்கும், அதன் மீது மானநட்ட வழக்கு தொடர்ந்த Dominion Voting என்ற வாக்கெடுப்பு இயந்திர தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையில் இறுதிநேரே $787.5 மில்லியன் உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலின்போது ராம்புக்கு ஆதரவாக பல ஆதாரம் அற்ற செய்திகளை Fox News வெளியிட்டு இருந்தது.

பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட Dominion Votes என்ற நிறுவனத்தின் வாக்கு பதியும் இயந்திரங்கள் மூலம் கள்ள வாக்குகள் பதியப்பட்டன என்றும் Fox ஆதாரம் அற்ற செய்திகளையும் வெளியிட்டு இருந்தது. அதை எதிர்த்து Dominion $1.6 பில்லியன் மானநட்ட வழக்கு தாக்கல் செய்தது.

அந்த வழக்கு ஆரம்பிக்க இருந்தவேளையில் இரு தரப்பும் $787.5 மில்லியன் இணக்கத்துக்கு வந்துள்ளன. அத்துடன் Fox News நிறுவனம் தாம் Dominion இயந்திரங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானவை என்றும் ஏற்றுக்கொள்ளும்.

ஒரு தடவை Dominion இயந்திரங்கள் தனக்கு கிடைத்த 2.7 மில்லியன் வாக்குகளை அழித்து விட்டதாக Fox கூறியது என்று ரம்ப் கூறியிருந்தார்.