Florida விடுதியில் 50 பேர் சுட்டுக்கொலை

Orlando

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Orlando என்ற நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் ஒன்றுக்கு 50 பேர் கொலை செய்யப்பட்டும், 53 காயமடைந்தும் உள்ளனர். கொலையாளி ஆப்கானித்தான் வழிவந்த, 29 வயதுடைய, Omar Mateen என்ற நபர் என்று சில தொலைக்காட்சி நிறுவனங்கள் கூறுகின்றன.
.
அமெரிக்காவின் பாதுகாப்பு இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகவே கருதுகிறது. தாக்குதல் செய்தவர் “organized and well-prepared” என்கிறார் போலீஸ் தலைவர் John Mina. கொலையாளி சுமார் 200 km தொலைவில் உள்ள வேறு ஓர் இடத்தில் வாழ்பவர். இவர் அமெரிக்காவில் பிறந்தவர்.
.
தாக்குதல் உள்ளூர் நேரப்படி ஞாயிரு அதிகாலை 2:00 மணியவில் இடம்பெறுள்ளது. Mateen ஒரு தனியார் காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி உள்ளார்.

.