FIFA 2014 கால்பந்தாட்ட போட்டிகள் இன்று (வியாழன்) பிரேசில் நாட்டின் Sao Paulo நகரில் ஆரம்பமாகிறது. முதல் தினத்தில் போட்டியை நடாத்தும் பிரேசிலுக்கும் குரோசியாவுக்கும் இடையில் போட்டி நடைபெறும். மொத்தம் 31 நாடுகள் 2014 போட்டிகளில் பங்குகொள்கின்றன.
ஆசிய-பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே பங்குகொள்கின்றன.
பிரேசில் நாட்டின் பலரும் அங்கு FIFA 2014 நடைபெறுவதை விரும்பி இருந்தாலும், சிலர் இதற்காக பெருமளவு பணம் செலவழிப்பதை வெறுத்து வீதி போராட்டங்களில் இறங்கி உள்ளனர். இந்த போட்டிக்கு சுமார் $12 பில்லியன் செலவானதாக கூறப்படுகிறது.
இந்த போட்டிகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறும்.
FIFA 2018 ரஷ்யாவிலும் FIFA 2022 கட்டாரிலும் நடைபெறும்.