சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் Li Hongzhi என்பவர் தலைமையிலான Falun Gong என்ற சீன அமைப்பை அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வளர்க்க ஆரம்பித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான இந்த அமைப்பை பயன்படுத்தி சீன கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நப்பாசையில் அமெரிக்கா இருந்தது.
ஆனால் சீனா வல்லரசு அளவுக்கு வளர Falun Gong தன்னை மட்டும் வளர்க்க ஆரம்பித்தது. இது சீனாவுக்கு எதிரான பரப்புரைக்கு பயன்பட The Epoch Times என்ற செய்தி நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தது.
Weidong Guan என்ற இந்த செய்தி நிறுவனத்தின் CFO (Chief Financial Officer) தற்போது பண கடத்தல் (money laundering) குற்றத்திற்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். உடனே இந்த நிறுவன CEO (Chief Executive Officer) பதவி விலகியுள்ளார்.
Falun Gong உறுப்பினரே மேற்கு நாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் முன்னாள் நின்று சீனாவுக்கு எதிரான பரப்புரைகளை செய்பவர்கள்.
இவர்களே Shen Yun என்ற இலாபகரமான சீன நடன நிகழ்ச்சிகளையும் செய்பவர்கள்.
இவர்கள் செய்யும் பொய் பரப்புரைகள் காரணமாக Facebook இவர்களின் கணக்குகளை மூடி இருந்தது.