பெண் பிள்ளைகளுக்கு Facebook நிறுவனத்தின் Instagram app பெரும் பாதிப்பை அளிக்கிறது என்று தெரிந்தும் facebook அதை மறைத்து உள்ளது என்கிறார் Frances Haugen என்ற முன்னாள் Facebook நிறுவன Product Manager. Haugen இதை அமெரிக்க காங்கிரசுக்கு இன்று செவ்வாய் வழங்கும் விசாரணை ஒன்றிலேயே கூறியுள்ளார்.
இளம் பிள்ளைகள் மிரட்டல்களுக்கு (bullying) உள்ளாகியது தெரிந்தும் Facebook அதை தடுக்கவில்லை என்கிறார் Haugen. இந்த மிரட்டல்கள் பிள்ளைகளின் படுக்கையறை வரை சென்றது Facebook நிறுவனத்துக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதிப்புக்கு உள்ளான பிள்ளைகள் தமது தொழில்நுட்ப அறிவு குறைந்த பெற்றோரிடம் இருந்து உதவி பெற முடியவில்லை என்பதையும் Facebook ஆய்வுகள் மூலம் அறிந்து உள்ளது என்றும் Haugen கூறியுள்ளார்.
அத்துடன் பொய்யான செய்திகள் விரைவில், அதிக அளவில் click, share செய்யப்படுவது தெரிந்து அவ்வகை பொய்யான செய்திகள், கூற்றுக்கள் பரவ Facebook உடந்தையாக இருந்தது என்றும் Haugen கூறியுள்ளார். ஜனவரி 6ம் திகதி வெள்ளை மாளிகையில் ரம்ப் ஆதரவாளர் செய்த தாக்குதலிலும் Facebookகின் பங்கு பெருமளவில் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
Facebook நிறுவனம் தனது இலாபத்துக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியதாகவும் (prioritize its profit), பொது நலனுக்கோ அல்லது பொதுமக்களின் பாதுகாப்புக்கோ முன்னுரிமை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதகமான பதிவுகளை கண்டறிந்து அழிக்க Facebook தனது AI நுட்பத்தை (Artificial Intelligence) பயன்படுத்துகிறது என்று கூறினாலும் இது 10% முதல் 20% வரையிலான பாதகமான பதிவுகளை அடையாளம் காண்கிறது என்றும் Haugen கூறியுள்ளார். போதை போன்ற விளம்பரங்களையும் AI 10% முதல் 20% வரையே அடையாளம் காண்கிறது என்றும், மிகுதி பிள்ளைகளை அடைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Whistleblower ஆக மாறிய முன்னாள் ஊழியரான Haugen மீது Facebook பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. Facebook நிறுவனத்தின் child safety பிரிவில் Haugen பணியாற்றி இருக்கவில்லை என்றும் அதனால் அவருக்கு உண்மைகள் தெரிந்திருக்க முடியாது என்றும் Facebook அதிகாரி Andy Stone கூறியுள்ளார்.
Instagram, Whatsapp ஆகியன தற்போது Facebook நிறுவனத்தின் கிளை நிறுவனங்களே.
தற்போது Facebookகில் 13 வயதுக்கும் மேலான வயதினரே இணையலாம். அனால் Facebook அண்மையில் 13 வயதுக்கும் குறைந்த வயதினருக்கும் ஒரு Instagram சேவையை ஆரம்பிக்க இருந்தது. பலத்த எதிர்ப்புகள் காரணமாக அந்த முயற்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.