ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பான ESAயும் (European Space Agency), ரஷ்யாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலமான ExoMars திட்டமிட்டபடி மெதுவாக தரை இறங்காமல், சுமார் 300 km/h வேகத்தில் தரையில் மோதி உடைந்திருக்கலாம் என்று NASAவும், ESAயும் கருதுகின்றன. இந்த கருத்தை அவர்கள் இன்று வெள்ளி கூறியுள்ளனர்.
.
.
செய்வாய் கிரகத்தை சுற்றிவரும் நாசாவின் செய்மதியான Mars Reconnaissance Orbiter (MRO) எடுத்துக்கொண்ட படம் ஒன்றின் அடிப்படையிலேயே ExoMars மோதிய உண்மை வெளியிடப்பட்டு உள்ளது.
.
தரையில் இருந்து 2 முதல் 4 km உயரம் வரை திட்டமிட்டபடி இறங்கிய இந்த விண்கலம் பின்னர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஏவப்பட்ட இக்கலம் இந்த மாதம் 19 ஆம் திகதியளவில் செவ்வாயின் வான்வெளியை அடைந்துள்ளது.
.
.
நகரமுடியாத இந்த ExoMarsஐ செய்வாயில் தரை இறக்கல், 2020 ஆம் ஆண்டில் நகரக்கூடிய (rover) ஒன்றை செய்வாய்க்கு அனுப்பும் நடவடிக்கையின் முன்நடவடிக்கை ஒன்றே.
.