இன்று இடம்பெற்ற Euro 2020 உதைபந்தாட்ட இறுதி போட்டியில் இத்தாலி முதலாம் இடத்தை வென்றுள்ளது. அதனுடன் மோதிய இங்கிலாந்து இரண்டாம் இடத்தை அடைந்து உள்ளது. கரோனா காரணமாக Euro 2020 இந்த ஆண்டே இடம்பெற்றது.
ஆட்டம் ஆரம்பித்து 2 நிமிடங்களில் இங்கிலாந்து தனது 1வது புள்ளியை (goal) பெற்றது. இத்தாலி 67 நிமிடங்களின் பின் தனது 1ம் புள்ளியை பெற்றது. ஆனால் 90 நிமிடங்களின் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் பின்னரும் 1:1 என்ற நிலையிலேயே புள்ளிகள் இருந்தன. இறுதியில் இடம்பெற்ற penalties மூலமே இத்தாலி 3:2 என்ற நிலையில் வெற்றி பெற்றது.
இன்று இத்தாலி ஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை அடைவது அதன் இரண்டாம் தடவை. 1968ம் ஆண்டும் இத்தாலி கேடயத்தை வென்று இருந்தது.
இம்முறையே இங்கிலாந்தும் இறுதி ஆட்டம் வரை முன்னேறி இருந்தது. ஆனாலும் கேடயத்தை வெல்லவில்லை. 1968ம் ஆண்டு இங்கிலாந்து 3ம் இடத்தை வென்று இருந்தது. பெல்ஜியமும் இதுவரை கேடயத்தை வெல்லவில்லை.
1960ம் ஆண்டு முதல் நாலு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் Euro உதைபந்தாட்ட போட்டிகளின் அடுத்த போட்டிகள் ஜேர்மனியில் 2024ம் ஆண்டு இடம்பெறும்.