ETA: 48 நாடுகளுக்கு பிரித்தானியாவில் புதிய ‘விசா’ 

ETA: 48 நாடுகளுக்கு பிரித்தானியாவில் புதிய ‘விசா’ 

இதுவரை விசா இன்றி செல்ல உரிமை கொண்டிருந்த 48 நாட்டவர்களுக்கு பிரித்தானியாவில் ETA (Electronic Travel Authorization) என்ற புதிய ‘விசா’ நாளை ஜனவரி 8ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றின் கடவுச்சீட்டு கொண்டவர்க்கே இந்த புதிய ‘விசா’ நடைமுறை செய்யப்படுகிறது.

மேற்படி 48 நாட்டவர்களும் பிரித்தானியா செல்ல விசா தேவை இல்லை என்று கூறப்பட்டாலும், ETA ஒரு விசாவுக்கான அனைத்து குணம்களையும் கொண்டுள்ளது.

1) பயணத்துக்கு முன்னரே ETA அனுமதிக்கு விண்ணப்பித்தல் அவசியம் 
2) EAT கட்டணம் 10 பௌண்ட்ஸ் ($12.50)
3) மொத்தம் 6 மாதங்கள் வரை பிரித்தானியாவில் தங்க ETA அவசியம் 
4) பிரித்தானிய விமான நிலையம் ஊடு Transit செய்வோருக்கும் ETA  தேவை 
5) ஒரு ETA இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் 
6) ETA அனுமதி கிடைக்க சுமார் 3 தினங்கள் தேவைப்படலாம் 
7) குழந்தைகள் உட்பட ஒவ்வொருவருக்கும் தனியே ETA தேவை 

ETA விசாவை பிரித்தானிய இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

இந்த ETA விசாவால் Heathrow விமான நிலையம் போன்ற பிரித்தானிய விமான நிலையங்கள் ஊடு transit செய்வது மேலதிக பளுவை தரும். அதனால் பயணிகள் வேறு பாதைகளை நாட ஆரம்பிப்பார்.