Elon Musk நிறுவனத்தின் Starship வியாழனும் வெடித்தது

Elon Musk நிறுவனத்தின் Starship வியாழனும் வெடித்தது

அமெரிக்க சனாதிபதி ரம்பின் வலதுகரமாக இருக்கும் Elon Musk கின் SpaceX நிறுவனத்தின் Starship வியாழன் மீண்டும் (Flight 8) ஏவலின் பின் வெடித்துள்ளது. பயணிகள் எவரும் இன்றி வியாழன் Texas நேரப்படி மாலை 5:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த கலம் 10 நிமிடங்களின் பின் வெடித்துள்ளது.

ஜனவரி மாதமும் Starship (Flight 7) ஏவலின் பின் 10 நிமிடங்களில் வெடித்து விழுந்திருந்தது. ஆனாலும் அந்த விபத்துக்கான காரணத்தை அறிந்து குறைபாட்டை திருந்த முன் மீண்டும் இன்னோர் ஏவலுக்கு அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) அனுமதி வழங்கியது கேள்விக்குறி ஆகியுள்ளது.

வெடித்த கலத்தின் பாகங்கள் எரிந்தவாறு Florida மாநில பகுதியில் விழுந்துள்ளன. அதனால் இப்பகுதியில் விமான போக்குவரத்தும் 1 மணி நேரம்வரை தடைப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்புக்காக இயங்கும் அரச அமைப்பான FAA ரம்பின் ஆதரவு கொண்ட Musk விசயத்தில் சட்டத்தை உதாசீனம் செய்ததாகவே கருதப்படுகிறது.

Starship வருங்காலங்களில் அமெரிக்கர்களை சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் காவி செல்லும் முயற்சியில் ஈடுபாடுள்ளது.