ஞானசார தேரருக்கு சிறை தண்டனை கிடைக்க வைத்த Sandhya Eknaligoவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கெண்டுள்ளது Amnesty International அமைப்பு. இன்று செவ்வாய் Amnesty வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமை சட்டங்களின்படி அரசுகள் தமது நாடுகளுள் மிரட்டலுக்கு உள்ளானோரை பாதுகாப்பது கடமை என்றுள்ளது.
.
.
ஞானசார தேரருக்கு சிறை தண்டனை கிடைத்தபின் எக்னாலிகொடவுக்கு பெரும் அளவில் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளதாக கூறுகிறது Amnesty. இந்த அமைப்பின் கருத்துப்படி, எக்னாலிகொட மீதான மிரட்டல்கள் நன்கு திட்டமிடப்பட்ட செயல்கள் என்று தெரிகின்றன.
.
.
எக்னாலிகொடவின் பிள்ளைகள் மீதும் கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன என்று கூறுகிறது Amnesty.
.
ஞானசார தேரர் தன் மீதான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கேட்கவுள்ளார்.
.