மத்திய அமெரிக்க நாடான Ecuador இல் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைக்கு குறைந்தது 116 கைதிகள் பலியாகி உள்ளனர். Guayas சிறையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த வன்முறைக்கு ஆயுதங்கள், குண்டுகள் என்பன பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மறுதினம் புதன்கிழமை நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்து இருந்தாலும் நிலைமை அவ்வாறு அல்ல என்று கூறப்படுகிறது. வியாழனும் சிறையுள் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.
Los Choneros, Jalisco New Generation ஆகிய இரண்டு போதை கடத்தும் வன்முறை குழுக்களுக்கு இடையே ஆரம்பித்த மோதலே பெரும் வன்முறையாக மாறி உள்ளது.
இரண்டு போலீஸ் அதிகாரிகள் மட்டும் சிறு காயம் அடைந்து உள்ளமை, மோதல் சிறை அதிகாரிகளுக்கு எதிரானது அல்ல என்பதை கூறுகிறது. தாக்குதலுக்கான கட்டளை வெளியே இருந்தும் வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.