Diego Garcia தமிழ் அகதிகள் பிரித்தானியா சென்றனர் 

Diego Garcia தமிழ் அகதிகள் பிரித்தானியா சென்றனர் 

Diego Garcia என்ற இந்து சமுத்திர தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழ் அகதிகள் செவ்வாய் பிரித்தானியாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 6 மாதங்களுக்கு பிரித்தானியாவில் வசிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுமார் 60 இலங்கை தமிழ் அகதிகள் Diego Garcia தீவில் தஞ்சம்அடைந்திருந்தனர். இவர்களில் 16 பேர் சிறுவர்கள். பிரித்தானியா சென்ற இவர்களுக்கு வழங்கிய கடிதம் ஒன்றில் இவர்களின் பிரித்தானிய அனுமதி “outside of the Immigration Rules” என்று கூறப்பட்டு உள்ளதாம்.

காலனித்துவ காலம் முதல் பிரித்தானியா ஆக்கிரமித்து இருந்த இந்த இந்து சமுத்திர தீவு உட்பட Chagos தீவுகள் தற்போது Mauritius என்ற இந்து சமுத்திர நாட்டிடம் மீண்டும் கையளிக்கப்படுகிறது.

ஆனாலும் பிரித்தானியா காலத்தில் இருந்து Diego Garcia தீவில் நிலை கொண்டுள்ள மிகப்பெரிய அமெரிக்க படை தளம் தொடர்ந்தும் இந்த தீவில் இருக்கும். அதாவது ஆக்கிரமிப்பு மட்டும் கைமாறி உள்ளது.