Florida மாநில ஆளுநர் Ron DeSantis தான் 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி போட்டியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். Republican கட்சியின் சார்பில் போட்டியிட தேவையான உட்கட்சி ஆதரவு இன்மையாலேயே அவர் விலகி உள்ளார்.
அத்துடன் DeSantis தனது ஆதரவை முன்னாள் சனாதிபதி ரம்புக்கு வழங்கி உள்ளார். அதனால் ரம்பின் கை மேலும் வலு அடைந்துள்ளது.
உட்கட்சி தேர்தலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள Nikki Haley மிக குறைந்த அளவு ஆதரவையே கொண்டுள்ளார்.
ரம்ப் உட்கட்சி தேர்தலில் வெற்றி அடைந்து Republican கட்சி சார்பில் போட்டியிடும் உரிமையை பெற்றாலும் அவர் மீதான உயர் நீதிமன்ற வழக்குகள் போட்டியிடுவதை தடுக்கலாம்.
அமெரிக்க அரசியல் பெரும் குழப்பத்தில் உள்ளது.