Covax இல் சீனா இணைவு, அமெரிக்கா, ரஷ்யா வெளியே

Covax இல் சீனா இணைவு, அமெரிக்கா, ரஷ்யா வெளியே

உலக அளவில் கரோனா தடுப்பு மருந்தை அனைத்து நாடுகளுக்கும் திட்டமிட்டு வழங்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியமும், பிரான்சும் கடந்த ஏப்ரல் மாதம் Covax (Covid-19 Vaccine Global Access) என்ற அணியை World Health Organization (WHO) அமைப்பின் கீழ் அமைத்தன. GAVI (Golobal Alliance for Vaccines and Immunization) என்ற அமைப்பும் இதில் அடங்கும்.

நேற்று சீனா தானும் Covax அமைப்பில் இனைந்து செயற்பட உள்ளதாக கூறி உள்ளது. அஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே இதில் அங்கம். ஆனால் அமெரிக்காவும், ரஷ்யாவும் Covax இல் இணைய மருத்துள்ளன.

தற்போது 9 தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் Covax அமைப்புடன் இணைந்துள்ளன. அதில் இரண்டு சீன மருந்துகள். சீனா சில நாடுகளுக்கு நேரடியாகவும் தனது தடுப்பு மருந்தை வழங்க உள்ளது. அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக மட்டுமே தமது மருந்துகளை சில நாடுகளுக்கு வழங்க உள்ளன.

Covax 2 பில்லியன் தடுப்பு மருந்துகளை முதலில் வழங்க முனைகின்றது. முதலில் ஒவ்வொரு நாட்டின் வைத்திய துறையினர் போன்ற ஆபத்து கூடிய பணியில் உள்ளோர்க்கு வழங்கப்படும். அது ஒவ்வொரு நாட்டின் 3% சனத்தொகையாக இருக்கும். பின் ஒவ்வொரு நாட்டின் 20% சனத்தொகைக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்.