Conde Nast விருப்பத்தில் இலங்கைக்கு 4 ஆம் இடம்

CondeNast

ஆடம்பர உல்லாச பயண வெளியீடான Conde Nast (luxury travel publication) அங்கத்தவர்களின் 2019 ஆம் ஆண்டுக்கான உல்லாச பயண விருப்ப தெரிவில் இலங்கை 4 ஆம் இடத்தில் உள்ளது.
.
இந்த வெளியீட்டில் அங்கத்துவம் கொண்ட சுமார் 600,000 உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் இவ்வருட வெளியீடு  The 32nd Reader’s Choice Awards ஆகும்.
.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தளமாக கொண்ட இந்த வெளியீடு பிரித்தானியாவிலும் பிரதிகளை வெளியிடுகிறது.
.
இந்தோனேசியா, தாய்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் முறையே 1 ஆம், 2 ஆம்  மற்றும் 3 ஆம் இடங்களில் உள்ளன.
.
South Africa, Peru, Greece, the Philippines, Italy and Vietnam ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுள் உள்ளன.
.