சீனா கடலை நிரப்பி கட்டிவரும் Colombo Port City யிலும் வரிகள் அற்ற கடைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கடைகள் ஏப்ரல் மாதம் முதல் சேவை செய்யும் என்று Belt and Road Initiative Sri Lanka கூறியுள்ளது.
நாட்டுக்கு திரும்பும் இலங்கையர் ஒவ்வொருவரும் $5,000 வரையான பெறுமதிக்கு பொருட்களை வரி இன்றி கொள்வனவு செய்ய முடியும். வெளிநாட்டவருக்கு பெறுமதி கட்டுப்பாடு இல்லை.
இங்கு கணனிகள், புகைப்பட கருவிகள், ஆடைகள் போன்ற 200 முதல் 300 வரையான பொருட்கள் விற்பனை செய்யப்படும். Port City யில் US dollar மட்டுமே பயன்பாட்டில் இருக்கும், இலங்கை நாணயம் அல்ல.
சிங்கப்பூரின் One World Duty Free தனது கடைகளை இங்கு கொண்டிருக்கும் என்று கடந்த மே மாதம் கூறியிருந்தது.
இந்த duty free நடைமுறைக்கு வந்த பின்னரே நுணுக்கமான விபரங்கள் அறியப்படும்.