ரஷ்யாவுடன் போராடும் யூகிரேனுக்கு மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, பெருமளவு இராணுவ உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை ரஷ்யா உத்தியோகபூர்வமாக தனது கண்டனத்தையும் அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளது. அதில் “most sensitive” ஆயுதங்கள் வழங்கப்படுவதால் “unpredictable consequences” இடம்பெறும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதையும் அளித்திருக்கவில்லை.
யுகிரேனிய இராணுவம் ரஷ்ய இராணுவத்துக்கு பாரிய இழப்புகளை வழங்குகின்றன என்பதற்கு பதிலாக அமெரிக்கா அண்மையில் யூகிரேனுக்கு வழங்கிய ஜாவலின் (Javelin) போன்ற tank தாக்கும் ஏவுகணைகளே ரஷ்யாவுக்கு பாரிய அழிவை வழங்கி வருகின்றன என்று கூறலாம்.
ஜாவலின் ஏவுகணை tank கை பலமான பக்கங்களில் தாக்காது, மேலிருந்து வீழ்ந்து பலமற்ற மேல் பகுதியை தாக்கும். ரஷ்யா இதுவரை 460 tank களை இழந்துள்ளது என்று கூறப்படுகிறது.
1990ம் ஆண்டு Cold War முடிந்த பின் ரஷ்யா அமெரிக்காவின் எதிரிகளுக்கு ஆயுதங்களை வழங்கி இருக்கவில்லை. ஆனால் அந்த நிலை வருங்காலத்தில் மாறலாம். இந்நிலை ஓரளவு சிரியாவில் இருந்தது. அதனாலேயே அமெரிக்க ஆதரவு கொண்ட Free Syrian Army என்ற ஆயுத குழு தோல்வி அடைந்தது.
யுத்தம் ஆரம்பித்த நாளில் இருந்து அமெரிக்கா இதுவரை சுமார் $2 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை யூகிரேனுக்கு வழங்கி உள்ளது. அதில் 2,000 Javelin ஏவுகணைகளும் அடங்கும்.