CIA என்ற ஊளவு நிறுவனமும் பனாமா கணக்கில்

MossackFonseca

இன்று வெளியான Panama Paper தகவல்களின்படி CIA என்ற அமெரிக்க உளவு நிறுவனமும் பனாமா கணக்குகளை பாவித்து உள்ளது. Mossack Fonseca என்ற நிறுவனத்தின் கணக்குகள் மூலம் CIA தனது கையாட்களுக்கு பணம் வழங்கியுள்ளது. அதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி றேகன் காலத்து Iran-Contra விடயமும் அடங்கும்.
.
றேகனின் நிர்வாகம், இஸ்ரவேல் மூலம் ஈரானுக்கு ஆயுதங்கள் விற்று அந்த வருமானத்தின் ஒரு பகுதியை நிக்கரகுவா இடதுசாரி எதிர்ப்பு அரசுக்கு வழங்கியிருந்தது. இதை செய்தபோது ஆயுத விற்பனை தடை காரணமாக அமெரிக்கா ஈரானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது குற்றமாகும். அத்துடன் நிக்கரகுவா இடதுசாரி எதிர்ப்பு அரசுக்கு ஆதரவு வழங்குவதும் குற்றமாகும். அதனாலேயே இஸ்ரவேலும், பனாமா கணக்குகளும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த உதவிக்கு பிரதியுபகாரமாக ஈரான் லெபனானில் கடத்தப்படிருந்த 7 அமெரிக்கர்களை விடுவிக்க உதவி செய்துள்ளது.
.
அத்துடன் Sheikh Kamal Adham என்ற முன்னாள் சவுதி உளவுப்படை தலைவரும் இந்த கணக்குகளை பயன்படுத்து உள்ளார். 1970 ஆம் ஆண்டுகளில் இவர் CIAயின் முக்கிய பங்காளராக இருந்துள்ளார். இவர் மூலம் CIA எகிப்திய அன்வர் சதாத், நாசார் போன்றோருக்கும் பொருளாதார உதவிகள் செய்துள்ளது. அக்காலத்தில் எகிப்தில் நிலைகொண்டிருந்த 16,000 சோவியத் ஆலோசகர்களும் வெளியேற்றப்பட இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
.
ஆனால் பிற்காலத்தில் Sheikh Kamal Adham ஊழல் காரணமாக அமெரிக்காவில் விசாரணை செய்யப்பட்டார். இவர் முக்கிய பங்கு கொண்டிருந்த Bank of Credit and Commerce Internationalலும் bankruptcy ஆகி இருந்தது. இறுதியில் இவர் $105 மில்லியன் தண்டம் செலுத்தி குறைந்த தண்டனை பெற்றிருந்தார்.
.