செங்டு (ChengDu) என்ற சீன நகரில் உள்ள அமெரிக்க முகவரகத்தை மூடுமாறு வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளது. இது அண்மையில் அமெரிக்கா சீனாவின் Houston முகவரகத்தை மூடுமாறு உத்தரவிட்டதற்கு பதிலடியாக. Chengdu சீனாவின் Sichuan மாநிலத்தில் தலைநகர் ஆகும். இந்த முகவரகமே திபெத் பகுதிக்கும் பொறுப்பு.
.
பொதுவாக இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் அல்லது யுத்தத்துக்கு நிகரான நிலையிலேயே மற்றைய நாட்டி தூதுவரகத்தை அல்லது முகவரத்தை மூட கட்டளையிடும். ஆனால் ரம்ப் அரசு அரசியல் நோக்கங்களுக்காக Houston முகவரகத்தை மூட உத்தரவிட்டது. பதிலுக்கு சீனா Chengdu முகவரகத்தை மூட உத்தரவிடுகிறது.
.
Wuhan நகரில் உள்ள அமெரிக்க முகவரகம் ஏற்கனவே காரோண காரணமாக செயல்பாடுகள் இன்றி உள்ளது.
.
1962 ஆம் ஆண்டு, இந்திய-சீன சண்டையின்போது, லாசாவில் (Lhasa) இருந்த இந்திய முகவரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டு இருந்தது.
.