CEO ஒருவரை கொலை செய்து துண்டாடிய உதவியாளர்

Pathao

Pathao மற்றும் Gokada ஆகிய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் CEO பதிவில் இருந்த Fahim Saleh (வயது 33) என்பவரை அவரின் நியூ யார்க் அடுக்குமாடியில் கொலை செய்த கொலையாளி உடலை துண்டாடியும் உள்ளார். மரணித்த Saleh பங்களாதேசத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர். இக்கொலை தொடர்பாக 21 வயதுடைய Tyrese Haspil என்ற மரணித்தவரின் உதவியாளர் (executive assistant) கைது செய்யப்பட்டு உள்ளார். Haspil ஒரு கருப்பு இனத்தவர்.
.
Saleh பங்களாதேசம், நேபாள், ஆகிய நாடுகளில் smartphone app மூலம் மோட்டார் சைக்கிள் taxi சேவை வழங்கும் நிறுவனம் (Pathao) ஒன்றை ஆரம்பித்து இருந்தார். பின்னர் நைஜீரியாவில் அந்நாட்டவர் ஒருவருடன் Gokada என்ற மோட்டார் சைக்கிள் மூலமான taxi சேவையை ஆரம்பித்து இருந்தார். Gokada சேவையை நைஜீரியா கடந்த பெப்ருவரி மாதம் தடை செய்து இருந்தது.
.
Saleh வுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உறவினர் ஒருவர் திங்கள் Saleh வின் அடுக்கு மாடி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு துண்டாடப்பட்ட உறுப்புகளை உறவினர் கண்டுள்ளார்.
.
சந்தேகநபர் மரணித்தவரிடம் பெரும் தொகை பணம் கடன் பெற்று உள்ளார் என்று விசாரணைகளை மேற்கொள்ளும் நியூயார்க் போலீஸ் அதிகாரி Rodney Harrison கூறி உள்ளார்.
.