Cell Phone OS யுத்தம்

இளவழகன்

ஒரு மின்னியல் உபகரணத்தை இயக்க பொதுவாக 3 பொருட்கள் தேவை. அவற்றுள் முதலாவது hardware. ஏதாவதொரு மின்னியல் பொருளை பார்க்கும் போது, hardware ஐயே பார்க்கிறோம். இதை தொடுதலும் முடியும். இவற்றுள் keyboard, mouse, screen, printer, போன்ற வெளிப்படையாக தெரியும் பொருட்களும் CPU (கணணியின் மூளை), hard-drive, memory, mother-board போன்ற உட்பொருட்களும் அதைவிட சிறிய அளவில் transistor, capacitor, resistor போன்றனவும் அடங்கும். இந்த hardware கள் தாமாக இயங்கமாட்டா.

தேவையான அடுத்த இரண்டு பொருள்களையும் எம்மால் பார்க்கவோ தொடவோ முடியாது. அதனால் அவற்றை software என்பர். பொதுவாக எந்தவொரு இலத்திரனியல் பொருளும் கொண்டிருக்க தேவையான ஒரு முக்கிய software OS (operating system). ஏறக்குறைய எல்லா இலத்திரனியல் பொருட்களும் ஒரேயொரு OS ஐதான் கொண்டிருக்கலாம். உதாரணமாக உங்களின் Windows கணனியில் உள்ள OS Windows XP, அல்லது Windows 7 போன்ற ஒன்றாக இருக்கும். Hardware ஐயும் OS ஐயும் கொண்ட இலத்திரனியல் பொருள் தாமாக இயங்க முடியும். ஆனால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.

மூன்றாவதாக இருப்பது Applications. உங்களிடம் பல applications இருக்கலாம். Microsoft Word, Excel, Power-Point போன்றன சில உதாரணங்கள். இவை OS இன்றி தாமாக hardware ஐ இயக்க முடியாது. OS இன் வேலை hardware க்கும் applications க்கும் இடையில் சேவையாற்றுவதே.

வீட்டுக்கு வீடு கணணியை கொண்டுவந்த Microsoft கடைப்பிடித்த குறைப்புத்திகள் காரணமாக உலக கணனிகளின் சந்தையில் சுமார் 95% Microsoft OS கொண்ட கணணிகளே. சந்தையை கட்டுப்படுத்தும் இந்த வேலையை அவர்கள் Intel என்ற CPU தாரிக்கும் நிறுவனத்துடன் சேர்ந்தே செய்தனர். Microsoft பின்னர் Anti-trust சட்டத்தின் மூலம் தண்டனையையும் பெற்றிருந்தது.

ஆனால் cell phone உலகில் Microsoft இன் ஆளுமை மிக குறைவு. ஏனென்றால் cell phhone களில் பாவிக்கும் OS களை பல நிறுவங்கள் தயாரிக்கின்றன. Cell phone களில் பயன்படும் OS களிடையே ஒரு போரே நடைபெறுகிறது எனலாம். 2012 ஆம் ஆண்டில் ஒவ்வொரு OS உம் கொண்டிருந்த சந்தையின் அளவு இங்கே தரப்படுகிறது.

1) OS பெயர்: Android
இதை தயாரிப்பவர்கள் Google நிறுவனம். உலக அளவில் 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 136 மில்லியன் Android OS கொண்ட cell phone கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த cell phone சந்தையின் 75% ஆகும்.

2) OS பெயர்: iOS
இதை தயாரிப்பவர்கள் Apple நிறுவனம். உலக அளவில் 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 26.9 மில்லியன் iOS கொண்ட cell phone கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த cell phone சந்தையின் 14.9% ஆகும்.

3) OS பெயர்: BlackBerry
இதை தயாரிப்பவர்கள் Research in Motion நிறுவனம். உலக அளவில் 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 7.7 மில்லியன் BlackBerry OS கொண்ட cell phone கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த cell phone சந்தையின் 4.3% aakum.

4) OS பெயர்: Symbian OS
இதை தயாரிப்பவர்கள் Nokia நிறுவனம். உலக அளவில் 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 4.1 மில்லியன் Symbian OS கொண்ட cell phone கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த cell phone சந்தையின் 2.3%.

5) OS பெயர்: Windows OS
இதை தயாரிப்பவர்கள் Microsoft நிறுவனம். உலக அளவில் 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 3.6 மில்லியன் Windows OS கொண்ட cell phone கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த cell phone சந்தையின் 2% ஆகும்.

6) OS பெயர்: Linux
இது சேவை மனம் கொண்டோரினால் தயாரித்து இலவசமாக கிடைக்கப்பெறுவது. உலக அளவில் 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 2.8 மில்லியன் Linux OS கொண்ட cell phone கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த cell phone சந்தையின் 1.5% ஆகும்.

இந்த மாதம் 30ஆம் திகதி முதல் Research in Motion ஒரு புதிய OS ஐ பயன்படுத்த தொடங்கவுள்ளது. இதன் பெயர் QNX. QNX கனடாவில் 1982 ஆம் ஆண்டு Quantum Software System என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதை Research in Motion கொள்வனவு செய்திருந்தது. எதிர்வரும் 30 ஆம் திகதி சந்தைக்கு வரும் BB10 என்ற cell phone இந்த OS ஐயே கொண்டிருக்கும். QNX இன் வரவு OS போட்டியை உக்கிரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.