சீனாவின் ShenZhou 14 என்ற கலம் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 10:44 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இரண்டு ஆண் விண்வெளி வீரரும், ஒரு பெண் வீரரும் இதில் பயணிக்கின்றனர். இவர்கள் 6 மாதங்கள் TianGong என்ற சீன விண் ஆய்வுகூடத்தில் தங்கியிருந்து TianGong கட்டுமான பணியை செய்வர். இது வீரர்களை கவி செல்லும் மூன்றாவது பயணமாகும். TianGong பல துண்டங்களாக சீனாவில் செய்யப்பட்டு, ஏவுகணைகள் மூலம் ஏவி, வானத்தில் வைத்து பொருத்தப்படுகிறது. ஏற்கனவே பல […]
பத்திரிகையாளர் ஜமால் கசோகியை (Jamal Khashoggi) படுகொலை செய்த காரணத்தால் சவுதி இளவரசர் முகமத் பின் சல்மான் (Mohammed bin Salman) மீது வசைபாடி, அவருடனான நேரடி தொடர்புகளை தவிர்த்த அமெரிக்க சனாதிபதி தற்போது அந்த கொள்கைகளை கைவிட்டு சவுதி சென்று சல்மானை சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. வெள்ளை மாளிகை தற்போது அவ்வாறு திட்டம் ஒன்றும் இல்லை என்று பகிரங்கமாக கூறினாலும், மறைவில் பைடெனின் சவுதி பயணத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கசோகி கொலைக்கு சல்மான் நிச்சயம் […]
ரஷ்யாவின் Aeroflot விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்றை இலங்கை முடக்கி உள்ளது. Colombo Commercial High Court நீதிபதி Harsha Sethunga வின் உத்தரவுப்படியே விமானம் முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 200 பயணிகளை கொள்ளக்கூடிய இந்த Airbus A330 வகை விமானம் வியாழன் காலை கொழுப்பு வந்திருந்தது. அது வெள்ளி அதிகாலை மீண்டும் மாஸ்கோ பறக்க இருந்த நிலையில் கட்டுநாயக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை தடுத்து வைத்ததற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா […]
உலகின் மிகப்பெரிய தாவரம் அஸ்ரேலியாவுக்கு அருகில் அண்மையில் காணப்பட்டுள்ளது. சுமார் 200 சதுர km கொண்ட இந்த கடல் தாவரம் (sea grass) ஒரு விதையில் இருந்து வளர்ந்தது என்பதாலேயே இது ஒரு தனி தாவரமாக கணிக்கப்படுகிறது. அத்துடன் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் கணிக்கப்படுகிறது. அஸ்ரேலியாவின் Perth நகருக்கு வடக்கே சுமார் 800 km தூரத்தில் உள்ள Shark Bay என்ற இடத்திலேயே இந்த கடல் தாவரம் உள்ளது. University of […]
பல நாடுகள் அந்நிய செலவாணியை பெறும் நோக்கில் தற்காலிக வதிவுரிமை வழங்குவது போல் இலங்கையும் தற்போது Golden Paradise Residence Visa வழங்க முன்வந்துள்ளது. அந்நிய நாட்டவர் இலங்கையில் $100,000 வைப்பு செய்தால் அவருக்கு 10-ஆண்டு கால வதிவுரிமை மற்றும் படிப்பு விசா வழங்கப்படும். வைப்பிடப்படும் $100,000 பணத்தின் அரைப்பங்கு ($50,000) ஒரு ஆண்டின் பின் மீள பெறப்படலாம். மிகுதி $50,000 வழங்கப்படும் விசா முடிவு அடையும்வரை வைப்பில் இருத்தல் வேண்டும். இந்த விசா கொண்டோர் இலங்கையில் […]
உலகில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை பிரித்தானிய அரசு திங்கள் அறிவித்துள்ளது. Bachelor’s, master’s படிப்பை கொண்டவர்களுக்கு 2-ஆண்டு விசாவும், PhD படிப்பை கொண்டவர்களுக்கு 3-ஆண்டு விசாவும் வழங்கப்படும். மேற்படி பட்டதாரிகள் தமது படிப்பை முடித்து 5 ஆண்டுகளுக்குள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விசா பெறுவோர் தமது குடும்பங்களையும் பிரித்தானிய அழைத்துவர அனுமதி வழங்கப்படும். தேவைப்படின் இவர்களின் விசா பின்னர் நீடிக்கப்படவும் உரிமை உண்டு. […]
Sidhu Moose என்ற கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவின் புஞ்சாப் மாநிலத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். தற்பொழுது 28 வயதுடைய இவர் 2016ம் ஆண்டு கனடா சென்று Toronto நகரை அண்டிய Brampton பகுதியில் வாழ்ந்தவர். இவர் கொலையை சட்டவிரோத குழுக்களின் செயல் என்கிறது இந்திய போலீஸ். ஆனால் உண்மை விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. Sidhu தனது பாடல்களில் அரசியல், சமூக விசயங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தார். அத்துடன் கடந்த ஆண்டு இவர் இந்திய காங்கிரஸ் […]
கடந்த சில கிழமைகளாக கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் 90,000 தொன் ரஷ்ய மசகு எண்ணெயுடன் தரித்து நின்ற கப்பலில் இருந்து அந்த மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு உரிய $72.6 மில்லியன் பணம் இலங்கை அரசால் செலுத்தப்பட்ட பின்னரே மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மார்ச் மாதம் 25ம் திகதி முதல் மூடப்பட்டுள்ள இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மேற்படி ரஷ்ய மசகை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்கும். அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா […]
The Gambia என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டை ஆண்ட Yahya Jammeh என்பவரின் மனைவிக்கு சொந்தமான மாளிகை போன்ற வீடு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் பறித்து உள்ளது. சுமார் $3 மில்லியன் பெறுமதியான இந்த வீட்டை விற்பனை செய்து அந்த பணத்தை சர்வாதிகாரியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க உள்ளது நீதிமன்றம். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Maryland மாநிலத்திலேயே சர்வாதிகாரியின் இந்த மாளிகை உள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள Gambia மக்கள் உளவு அறிந்து நீதிமன்றத்துக்கு எடுத்து உள்ளனர். […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Uvalde என்ற இடத்து Robb Elementary School மாணவர் 18 பேர் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளனர். உள்ளூர் நேரப்படி இந்த சூடு மதியம் 12:17 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரும், வயது 18, அதிகாரிகளின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். கவச உடைகள் அணிந்த சந்தேகநபர் முதலில் தனது பேத்தியை (grandmother) சுட்டுள்ளார். பேத்தி ஹெலி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். சந்தேகநபர் பின்னர் தான் பயணித்த pick-up வாகனத்தை […]